கோவிந்தா

கோவிந்தா என்று கூப்பிட பெருமாள் மிகவும் மகிழ்ந்து போவாராம்...கோவிந்தா என்று யார் கூப்பிட்டாலும் அவர்கள் பண்ணின பாவமெல்லாம் தீயில் இட்ட பஞ்சு போல் நசிந்து போகும்...
கோவிந்தா என்ற சொல்லுக்கு "பசுக்களின் தலைவன், கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவன்'', "பூமியை தாங்குபவன்'' என்று பொருளாகும். எனவே தான் பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்கிறார்கள். கோவிந்தா எனும் சொல்லுக்கு வேறொரு பொருளும் உண்டு. இதை `கோ இந்தா' என்றும் பிரிக்கலாம். அப்போது `கோ' என்றால் `பசு' `இந்தா' என்றால் `வாங்கிக்கொள்' என்று பொருள் வரும். 
கோவிந்தா... கோவிந்தா... என சொல்லச்சொல்ல பசுதானம் செய்த புண்ணியம் கிடைத்துக் கொண்டே இருக்குமாம். எப்போதும் கோவிந்த நாமம் சொல்லிக்கொண்டே இருங்கள். பசுக்களுடன் விளையாடி மகிழ்ந்த கிருஷ்ணனின் அருள் பூரணமாகக் கிடைக்கும்.
சங்கினை ஏந்திய கோவிந்தா - எந்தன் 
சங்கடம் தீர்ப்பாய் கோவிந்தா 
சக்கரம் ஏந்திய கோவிந்தா - உந்தன் 
பக்கத்தில் ஏற்பாய் கோவிந்தா
கமலக் கண்ணனே கோவிந்தா - எந்தன் 
கவலைகள் அழிப்பாய் கோவிந்தா 
பார்த்த சாரதி கோவிந்தா - உந்தன் 
பதத்தினில் சேர்ப்பாய் கோவிந்தா..