கடவுள் உங்களுக்கு அளித்துள்ள…

கடவுள் உங்களுக்கு அளித்துள்ள கொடைதான் ‘இன்றைய தினம்’

 

கொடுக்கப்படும் பொருளின் பின்னால் உள்ள இதயத்தை அடையாளம் கண்டுகொள்ளும் போதுதான் அப்பொருள் ஒரு பரிசகிறது. ஒரு பரிசின் பின்னால் உள்ள இதயத்தை தவறிவிடும் போது, அப்பரிசு ஒரு சாதாரண பொருளாகிறது.

உங்களுக்குப் பேனாவைக் கொடுத்த இதயத்தை அடையாளம் கண்டுகொள்ளும் போது அது பரிசகிறது. உங்கள் வளச்சியில் இதயபூர்வமாகச் செயல்பட்ட உங்களது பெற்றோர்களின் இதயங்களை நீங்கள் அடையாளம் கண்கொள்ளும் போது நீங்கள், ‘என் குழந்தை பருவம் எனக்குக் கிடைத்த வெகுமதி’ என்று கூறுகீறிர்கள். அறிவை உங்களுக்கு பரிமாற்றம் செய்த ஆசிரியரின் இதயத்தை நீங்கள் கண்டுகொள்ளும் போது, கல்வி ஒரு பரிசகிறது. உங்களது வளச்சியில் அக்கறை கொண்டுள்ள முதலாளியின் இதயத்தை நீங்கள் புரிந்து கொள்ளும் போது, உங்கள் வாழ்க்கைநிலை ஒரு வெகுமதியாக மாறிவிடுகிறது. உங்களது நிறுவனத்தில் ஈடுபட்டுடன் வேலை செய்யும் ஊழியர்களின் இதயத்தை கண்டுகொள்ளும் போது அது ஒரு பரிசகிறது.

பரிசு என்பது ஒரு பொருளல்ல. அது ஒரு கண்ணோட்டம். வளங்கபட்டப் பொருளின் பின்னால் உள்ள இதயத்தை தரிசிக்கத் துடிக்கும் பார்வை.
அந்த நோக்கில் பார்த்தால் ‘இன்றைய தினம்’ ஒரு அழியாத பரிசு. ஒவ்வொரு பரிசுக்கு பின்னால் பலர் இருந்தாலும், ‘இன்றைய தினம்’ என்ற விலைமதிப்பற்றப் பரிசை நீங்கள் கடவுளிடம் இருந்து மட்டுமே பெற முடியும். அப்படி இல்லாவிட்டால், நீங்கள் ஏற்கனவே உங்களது கடைசி தினத்தை வாழ்ந்து விட்டீர்கள் என்று பொருள். நேற்றைய இரவு படுக்கச்சென்ற அனைவரும் இன்று காலை கண்விழித்து எழவில்லை. நீங்கள் அப்படிக் கண் விளித்திருக்கீறீர்கள் என்றால், நம்மை மீறிய எதோ ஒரு சக்தி மற்றுமொரு ‘இன்றைய தினத்தை’ வாழ நீங்கள் தகுதியானவர்கள் தான் என்று நினைத்திருக்கிறது. இந்த 24 மணிநேர சமாசாரத்தின் பின்னால் உள்ள தெய்வீகப் பரிசு. அப்படிப்பட்ட ஒரு பரிசைத் தவறாகப் பயன்படுத்துவது, பரிசளித்தவரைப் பழிப்பதற்குச் தந்தவரை நிந்திப்பதாகும். வேகுமதியின் மதிப்பை நீங்கள் புரிந்திருந்தால் மட்டுமே உங்களால் வெகுமதியைப் பாராட்ட முடியும்.இன்றைய தினத்தை மதியுங்கள். அதை மதிப்புடையதாக ஆக்குங்கள்.

இன்று, உங்கள் வாழ்க்கையின் ஒரு நாளை அதற்குப் பதிலாகக் கிடைக்கும் எதோ ஒன்றிற்காகச் செலவிடப் போகிறீர்கள். அதனால் உங்களது இன்றைய தினத்தை உங்களால் முடிந்த அளவு பயனுள்ளதாக ஆக்குங்கள். உங்கள் மீதமுள்ள வாழ் நாட்களின் தொடக்க தினம்தான் இன்றைய தினம். அதனால், கடந்தகாலத்தை உங்களிடமிருந்து பிரித்தெடுக்கும் விதத்தில் ஒரு கோடு வரையுங்கள். நேற்றைய தினம் நேற்றே முடிந்துவிட்டது என்று நம்புங்கள். வருங்காலத்திற்கு விரையும் பொத்தானை அழுத்துங்கள். கடந்தகாலத்தின் வடுக்கைப் பற்றி இன்றைய தினத்திற்குக் கவலை கிடையாது. வருங்கலத்தின் உரிதிய்ற நிலையம் அதைப் பாதிப்பதில்லை. இன்றைய தினம் ஒரு தினம். ஒரு சந்தர்ப்பம். வாழ்வின் ஒரு அங்கம். அதனால் இன்றைய தினங்களைக் கவனமாகக் கையாளுங்கள்.

புத்தர் இவ்வாறு கூறியுள்ளார். “இன்று நாம் விழித்தெழுந்து நன்றி செலுத்தலாம். அன்று நம்மால் நிறையக் கற்றுக் கொள்ள முடியாவிட்டாலும், குறைவாகக் கற்றுக் கொள்ள முடியாவிட்டாலும் உடல் நிலைக் குறைவு ஏற்பட்டாலும் இறந்து போகாமல் இருந்ததற்காக நாம் அனைவரும் நன்றி செலுத்துவோமாக!”

அதனால் இப்படிப் பிரார்த்தியுங்கள்: ‘கடவுளே, என்னுடைய இன்றைய தினம் நீவிர் எனகளித்துள்ள கோடை. நான் அதை வாழும் விதம் நான் உமகளிக்கும் பரிசாக இருக்கட்டும்.”