2017 வைகாசி மாத மிதுன ராசி பலன்கள்

சுக்கிரன் உச்சம் பெற்று குருவின் பார்வையில் இருப்பதும்,

பாக்கிய லாபாதிபதிகள் சனியும், செவ்வாயும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்வதும் மிதுன ராசிக்கு அனைத்து விஷயங்களிலும் நல்லபலன்களையும் நிம்மதியையும் தரக்கூடிய அமைப்பு என்பதால் வைகாசி மாதம் மிதுனத்திற்கு வசந்த மாதமாக இருக்கும்.

சிலருக்கு உல்லாசப் பயணங்கள் உண்டு. இன்னும் சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைக்கும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். பெண்களுக்கு நன்மை தரும் மாதம் இது.

யோகாதிபதி சுக்கிரன் உச்ச நிலையில் இருப்பதால் இது மிதுன ராசிக்காரர்களின் மனம் மகிழும் மாதமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் உண்டு.

குடும்பத்தினர் கேட்கும் பொருட்களை வாங்கி கொடுத்து செலவு செய்வீர்கள். பெண்களினால் உதவிகளும் ஆதரவுகளும் நல்ல பலன்களும் இருக்கும். தனலாபம் உண்டு.

பணத்திற்கு பஞ்சம் இருக்காது. வாக்குறுதியைக் காப்பாற்றுவீர்கள். வாக்குப் பலிக்கும்.

இதுவரை மந்தமாக இருந்து வந்த வேலை தொழில்

வியாபாரம் போன்றவைகள் இனிமேல் விறுவிறுப்புடன் நடக்க ஆரம்பிக்கும். கடன் தொல்லைகளால் அவதிப்பட்டவர்களுக்கு கடன் பிரச்னைகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.

தாயார்வழியில் நல்ல விஷயங்களும் அம்மாவின் மூலம் ஆதாயங்களும் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

முப்பது வயதுகளில் இருக்கும் இளைஞர்கள் இனிமேல் தன்னம்பிக்கையுடன் எதையும் சாதிப்பீர்கள்.

எதிர்காலத்தில் நீங்கள் வளமான வாழ்க்கை வாழக்கூடிய அமைப்புக்கு அஸ்திவாரம் போடும் மாதமாக இது அமையும்.