சிவ பூஜையும் அபிஷேகங்களும்

ஆலயங்களில் தெய்வத் திருமேனிகளுக்கு அபிஷேகம் செய்கின்றனர்.
அபிஷேக்ஷனம் என்று பெயர். அபிஷேகம் என்றால் ஈரமாக்குதல்; நனைத்தல். இதற்கு இன்னொரு பெயர் ஜலார்ச்சனை.
ஜலம் என்றால் நீர். நீரை வைத்து நிகழ்த்தப்படும் மிகப்பெரிய கிரியைதான் அபிஷேகம். இந்த அபிஷேகமானது உலக தட்பவெப்ப நிலையைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.
அதனால்தான் அபிஷேகத்தைப் பார்க்கக்கூடாது என்று சொல்வர். சந்தனாபிஷேகம், விபூதி அபிஷேகம், கலசாபிஷேகம் ஆகியவற்றைப் பார்க்கலாம்.                                 
மற்ற அபிஷேகங்களைப் பார்க்கக் கூடாதென்பது ஆகம விதி. இவையெல்லாம் ஒவ்வொரு அபிஷேகத்தின்போதும் ஏற்படும்
ஆற்றலைக் கணக்கிட்டு விதிக்கப் பட்டவையாக இருக்கலாம். தற்போது பாலாபிஷேகம், தயிராபிஷேகம் போன்றவற்றை பக்தர்கள் காணும்படி செய்கிறார்கள். அவ்வாறு பழகிவிட்டது. 
அபிஷேகம் செய்யும்போது பெரும் பகுதி அபிஷேகத்தை முன்கூட்டியே செய்து விடுவார்கள் இருப்பினும்  பக்தர்கள் திருப்திக்காக அவர்கள் காணும்வண்ணம் கொஞ்ச நேரம் செய்வார்கள்
காளிகாம்பாள் ஆலயத்தில்கூட நண்பகல் அபிஷேகத்தை திரைபோட்டுதான் செய்யப்படுகிறது மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் பத்து லட்ச ரூபாய் கட்டினாலும் அபிஷேகம் காணமுடியாது.
அன்றிலிருந்து இன்றுவரை அந்த விதிமுறை பின்பற்றப்படுகிறது.
ஆக இந்த வழக்கம் எல்லா இடங்களிலும் இருந்திருக்கும் என்பதை அறியமுடிகிறது- "இல்லது வாராது; உள்ளது மறையாது' என்பதுபோல!
சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்யும் போது அதன் மேல்பகுதியிலிருந்துதான் செய்யவேண்டும்.
பாணத்தின் உச்சியில் வட்ட மாகக் கட்டப்பட்ட பூக்களை வைத்துதான் அபிஷேகம் செய்யவேண்டும் எந்த வகை மலரால் வேண்டுமானாலும் வளையம் அமைக்கலாம்.
அதை சுவாமியின் சிரசில் வைத்து அபிஷேகம் செய்தால் கீழே விழாது. இந்த வளையத்துக்கு இண்டம் என்று பெயர்.
மற்ற தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்யும்போதும் சிரசில் இண்டம் எனப் படும் மலர்வளையத்தை வைக்கவேண்டும். அபிஷேகத்தின்போதுதான் என்றல்ல.
எப்போதும் இண்டம் வைக்கலாம். சிவலிங்கத்தை வெறுமனே காணக்கூடாது.
அதன் உச்சியில் ஒரு சிறு மலரையாவது எப்போதும் வைத்திருக்கவேண்டும். அதன் மேல்பகுதிக்கு ஈசான முகம் என்று பெயர்.
ஈசனின் மற்ற நான்கு முகங்களான சத்யோஜா தம், வாமதேவம், தத்புருஷம், அகோரம் ஆகியவை மற்ற நான்கு திசைகளையும் குறிக்கின்றன.
முருகப்பெருமானை ஈசன் தோற்றுவிக்கும்போது அதோமுகம் என்னும் ஆறாவது முகத்துடன் இருந்தார் என்பர்.
இந்த முகம் கீழே உள்ளது. கீழே என்றால் கீழ்நோக்கிய பார்வை என்பதல்ல; உள்ளே சென்று பார்க்கக்கூடியது. முருகனுக்குரியதாக இது சொல்லப்படுகிறது.
குறி சொல்கிறவர்கள், அருள்வாக்கு சொல்பவர்களையெல்லாம் பாருங்கள். அவர்கள் முருக உபாசகர்களாக இருப்பார்கள். முருகனை உபாசிக்க உபாசிக்க, ஒருவரின் உள்ளிருக்கும் ரகசியங்களை அறியும் ஆற்றல் உருவாகும்.
ஆக, சிவலிங்கத்தின் ஈசான முகத்துக்கு தான் அபிஷேகம் செய்யவேண்டும்.
பாணத்துக்குக் கீழுள்ள கோமுகியுடன் கூடிய அகன்ற பகுதியை ஆவுடையார் என்பர்.
(இந்த கோமுகி வடக்கு அல்லது கிழக்கு பார்த்துதான் இருக்கவேண்டும்.) "ஆ' என்றால் பசு. அதாவது
ஜீவாத்மாக்கள். இவையெல்லாம் இந்த ஆவுடையாருக்குள்தான் இருக்கின்றன.
இங்கிருந்துதான் அனைத்துயிர்களும் வெளிப்படுகின்றன. இது அம்பாள் பாகம் எனப்படுவதால், கண்டிப்பாக இதன்மீது ஆடை சார்த்தித்தான் அபிஷேகம் செய்யவேண்டும்.
இங்கே ஒரு விஷயத்தைக் குறிப்பி டுகிறேன். நலிந்த நிலையிலுள்ள ஆலயங்களை சீரமைக்க முயலும்போது, அவ்வாலயத்தின் நிலைபற்றி மக்கள் அறிந்துகொள்ள படம் எடுக்கின்றனர்.
அப்படி எடுக்கும்போது, ஆவுடையாருக்கு ஒரு ஆடை சார்த்தி, சிவலிங்கத்தின் சிரசில் ஒரு மலரை வைத்துவிட்டுதான் எடுக்கவேண்டும்.
திருப்பணி செய்வோர் இதை கவனத்தில் கொள்ளவேண்டும். ஏனெனில் சிவலிங்கம் என்பது பிரபஞ்ச வடிவம். அதில் பிரபஞ்ச ஆற்றல் நிறைந்துள்ளது.
அதன் கீழ்ப்பாகம் பிரம்மபாகம் எனவும், நடுப்பகுதி விஷ்ணு பாகம் எனவும், மேல்பகுதி ருத்ர பாகம் எனவும் அழைக்கப்படுகிறது. இவ்வளவு ஆற்றல்களும் அடங்கிய சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்யும்போது, நமக்குள்ள தீய எண்ணங்கள்,
கோபம், ஆவேசம், வளர்ச்சியின்மை போன்றவையெல்லாம் அகற்றப் பட்டு மலர்ச்சியுடையவர்களாகிறோம். எல்லா ஜீவராசிகளுக்கும் இதன் பயன் சென்று சேர்கிறது. அவ்வாறு ஒரு மாறுதலை ஏற்படுத்தக்கூடிய ஒரு கிரியைதான் அபிஷேகம்.
முதலில் சுவாமிக்கு எண்ணெய்க் காப்பு சார்த்துவார்கள்.
நமக்கு சிறு வயதில் தலையில் நன்றாக எண்ணெய் தேய்த்துவிடுவார்கள். அது நம் உடலிலுள்ள வெப்பத்தைப் போக்கி குளிர்ச்சியை உண்டாக்கும். அதுபோலவே செய்யப்படுவதுதான் இதுவும்.
தெய்வ சந்நிதியில் சுற்றிலும் விளக்குகள் உள்ளன. நாமும் செல்கிறோம். அதனால் ஏற்படும் வெப்பம் தெய்வத் திருமேனியில் தங்கும். அதைப் போக்கவே எண்ணெய்க் காப்பு. எண்ணெய்க்காப்பு சாற்றும்போது நன்றாக தலையில் தேய்த்துவிட வேண்டும்.
அது கல் அல்ல; சாட்சாத் சுவாமிதான். கை, கால்களைப் பிடித்து உபசாரம் செய்யவேண்டுமென்று சாஸ்திரத்திலே சொல்லப்பட்டுள்ளது. வஸ்திரம் சாற்றித்தான் அபிஷேகம் செய்யவேண்டும்.
பிறகு இதற்கென உள்ள பொடி வகைகளைக்கொண்டு நன்றாகத் தேய்த்துவிடவேண்டும். எண்ணெய்ப் பிசுக்கெல்லாம் அகன்றுவிடும். பிறகு பால், தயிர்,
பழரசம் போன்றவற்றைக்கொண்டு அபிஷேகம் செய்யவேண்டும். இந்த செயல்களையெல்லாம் பயபக்தியோடு செய்யவேண்டும். இப்படி செய்யப்படும் அபிஷேகத்தால் அனைத்துலகுக்கும் நன்மைகள் ஏற்படும்.
ஒவ்வொரு அபிஷேகத்துக்கும் தனித் தனியான பலன்களும் உள்ளன.
ருத்ராபிஷேகம் செய்தால் மனஅமைதி கிட்டும். அனைத்து கவலைகளும் அகலும். அதனால்தான் ஆலயங்களுக்குச் செல்லவேண்டுமென்கிறோம்.
வீடுகளில் இவற்றையெல்லாம் முறையாக செய்யமுடியாது. ஆலயத்துக்குச் சென்றால் அனைத்தும் முறைப்படி இருக்கும்.
அம்மா சமைத்து வைத்திருக்கிறாள்; போய் சாப்பிடுவது தான் பாக்கி என்பதுபோல.
இவ்வாறு அபிஷேகம் செய்யும்போது அதன்சக்தி உடனே எல்லா இடங்களுக்கும் பரவுகிறது.
தொடர்ந்து செய்யச் செய்ய அனைத்து மக்களுக்கும் அந்த சக்தியானது சென்றுசேர்கிறது. எவ்வளவு அபிஷேகம் செய்கிறோமோ, அந்த அளவுக்கு சுவாமிக்கு நிவேதனங்களைப் படைக்கவேண்டும்.
நாம் அதிக நேரம் குளித்தால் என்னாகும்? அதிக பசியெடுக்கும். சுவாமிக்கு நூறு படி பாலில் அபிஷேகம் செய்துவிட்டு இரண்டு வாழைப்பழங்களை நிவேதனம் செய்யலாமா?
நூறு படி அபிஷேகம் செய்தால் ஐம்பது படியாவது நிவேதனமாகப் படைக்கவேண்டும். நாம்  இரண்டு லிட்டர் பால் கொடுக்கிறோமென்றால்
ஒரு லிட்டரை அபிஷேகத்துக்குப் பயன்படுத்திவிட்டு ஒரு லிட்டர் பாலை நிவேதனம் செய்துவிடு விடுவார்கள்.
"நைவேத்யம் க்ஷீ னே துர்பிட்சம்' என்பார்கள். நிவேதனம் குறையக்குறைய வளர்ச்சி குறையும் என்பது பொருள். நாட்டுக்கு நல்லதல்ல.
சரி; நிறைய அபிஷேகம் செய்து நிறைய நிவேதனம் செய்தால் பெரிய அளவு வளர்ச்சி ஏற்படுமல்லவா என்று நினைக்கத்தோன்றும்.
எதற்குமே ஒரு வரையறை உள்ளது. அபிஷேகம் செய்ய 24 நிமிடங்கள் என்று கணக்குள்ளது. அதற்குமேல் செய்யக்கூடாது. அந்த 24 நிமிடங்களுக்குள் எல்லா அபிஷேகங்களையும் முடித்துவிட வேண்டும்.
(பிரம்மோற்சவம் போன்ற சிறப்பு தினங் களில் செய்யப்படுவது வேறு.)
அபிஷேகப் பொருட்கள் அதிகமாக இருந்தால் காலை பூஜை, நண்பகல் பூஜை, மாலைநேர பூஜையென காலங்களைப் பிரித்துக்கொண்டு  செய்வார்கள். சுவாமி மீது ஆடையும் பூக்களும் இருக்கவேண்டியது அவசியம்.
இவ்வாறு எல்லாவற்றையும் முறையாகச் செய்தால்தான் அந்த ஆலயத்தில் சாந்நித்யம் நிறைந்திருக்கும்.
பக்தர்களின் கோரிக்கைகள் நிறைவேறும். நாட்டிலும் செழிப்பும் நிம்மதியும் நிலவும். ஒரு சிலை வடிக்கப்படுகிறது. அது பிரதிஷ்டை செய்யப் பட்டு ஆலயம் அமைக்கப்படுகிறது. அத்துடன் வேலை முடிந்துவிடுவதில்லை.
சரியாக பராமரிக்கப்பட வேண்டியது அவசியம். இல்லையென்றால் அதன் முழு சக்தி நமக்கு கிடைக்காது.
அபிஷேகம் முடிந்ததும் தூய்மையான ஆடையால் நன்றாகத் துடைத்துவிட வேண்டும். பின்னர் சுவாமிக்கு வேறு ஆடை சாற்றவேண்டும்.
சிலர் களைந்த ஆடையையே சாற்றுவர். அவ்வாறு செய்யக்கூடாது. இதை தர்மகர்த்தா கவனிக்கவேண்டும்.
சுவாமிக்கான வஸ்திரம் இருக்கிறதா, மலர்கள் இருக்கின்றனவா, இண்டம் இருக்கிறதா, நிவேதனப் பொருட்கள் என்ன இருக்கின்றன- அதை எந்த முறையில் பயன்படுத்துவது உள்ளிட்ட எல்லா விஷயங்களையும் தர்மகர்த்தா கவனிக்கவேண்டும்.
விழாவுக்கு மட்டும்போய் மாலை மரியாதை பெற்றுவருவதல்ல. வீட்டில் என்னென்ன பொருட்கள் இருக்கின்றன-
என்னென்ன தேவையென்று கவனித்து அவற்றை சரியான முறையில் நிறைவேற்றித் தருவதுதான் குடும்பத் தலைவனின் கடமை. வீட்டுக்குப் போய் சாப்பிட்டுவிட்டு வருவதல்ல. தர்மகர்த்தா பணியும் அத்தகையதே.
பெருமாள் கோயிலில் தீர்த்தத்தில் கலக்கப்படும் பச்சைக் கற்பூரம், வாசனையாகவும் வித்தியாசமான சுவையுடையதாகவும் இருக்கும்.
உடலில் ரத்தக்காயம் ஏற்பட்டால், நாம் உடனே காயம் செப்டிக் ஆகாமல் இருக்க தடவுகிறோமே பென்சாயின் ! அது வேறொன்றுமில்லை, பச்சைக் கற்பூரக் கலவையில் உருவாவதுதான்
கர்ப்பக்கிருகத்தில் நம்மேல் பாயக்கூடிய பாஸிடிவ் காந்த அலைகளைப் பெற்றுக் கொள்வதற்காகத்தான் பல கோயில்களில் ஆண்கள் சட்டை அணியாமல் வர வேண்டும் என்று சொல்கிறார்கள்.
பொதுவாகப் பெண்கள் அணியும் தங்க நகைகளில் கலந்திருக்கும் செம்பின் மூலம் அவர்களுக்கும் இதே எனர்ஜி பாய்கிறது.
கோயில் பிராகாரத்தை 11 முறை, 108 முறை என்று பிரதட்சணம் செய்யும்போது, நமது உடலின் கொழுப்பு தானாக எரிந்து ஆரோக்கியம் கூடுகிறது. அந்தக் காலத்தில் கோயிலுக்குச் சென்று பிரதட்சணம் செய்ததாலேயே சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் தவிர்க்கப்பட்டன
இதோடு வேத கோஷமும், பிரார்த்தனை சுலோகங்களும் சொல்லும்போது, உடலுடன் சேர்ந்து உள்ளமும் புத்துணர்ச்சி பெறுகிறது.மனஅழுத்தம் போயேபோச்சு
இப்படி ஒவ்வொரு செயலும் முறைப்படி நடக்கும் ஆலயங்களால்தான் நாட்டில் சுபிட்சம் நிலவுகிறது. நல்லோர் பெருகுகிறார்கள். ஒழுக்கமும் நேர்மையும் நிலைபெறுகிறது அற்புதங்கள் பல                         அங்கே அரங்கேறுகின்றன.
🙏 திருச்சிற்றம்பலம்   🙏                                                                                                                                                                      🙏 ஓம் நமசிவாய          🙏                                                                                                                                                                         🙏 ஓம் நமசிவாய          🙏⁠⁠⁠⁠